திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவ பெருமாளுக்கு, ஏகாதசியை முன்னிட்டு, திருமஞ்சன அபிஷேகம் நடந்தது. திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில், நேற்று, ஏகாதசியை முன்னிட்டு, உற்சவருக்கு அபிஷேகம் மற்றும் திருமஞ்சன அலங்காரம் நடந்தது. தொடர்ந்து உற்சவர், மாடவீதிகளில் வீதிஉலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல், சத்தியமூர்த்தி தெருவில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், நேற்று மாலை, உற்சவருக்கு திருமஞ்சன அபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை தரிசனம் செய்தனர்.