மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் ஆதிபராசக்தி வார வழிப்பாட்டு மன்றம் சார்பில் உலக அமைதி வேண்டி, கஞ்சி கலய ஊர்வலம் நடந்தது. இதையொட்டி ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தில் நேற்று காலை 7:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. காலை 10:00 மணியளவில் பழைய நெய்வேலி பெருமாள் கோவிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் கஞ்சி கலயம், முளைப்பாறி, தீச்சட்டி, பால்குடம் சுமந்தபடி முக்கிய வீதிகள் வழியாக மந்தாரக்குப்பம் பஸ் நிலையம் ஆதிபராசக்தி மன்றத்துக்கு வந்தடைந்தனர். தொடர்ந்து சுவாமிக்கு பால் அபி ஷேகம் நடந்தது. ஏராளமனோர் தரிசனம் செய்தனர்.