ராமர் கோவில்களில் ஆஞ்சநேயர் ராமரை வணங்கிய நிலையில் இருப்பதைக் காணலாம். ஆனால், மதுரை அருகிலுள்ள மன்னாடி மங்கலம் நரசிம்மர் கோவிலில் ஆஞ்சநேயர், தன்னைத்தானே வணங்கும் அபூர்வ கோலத்தில் காட்சி அளிக்கிறார். இக்கோவிலின் முன் மண்டப சுவரில் ஆஞ்சநேயர் சிற்ப வடிவில் இருக்கிறார். இவருக்கு முன்புறம் மற்றொரு ஆஞ்சநேயர் சிலை வடிவில் இருக்கிறார். இவர், சிற்ப வடிவில் இருப்பவரை இருகரம் கூப்பி வணங்கிக் கொண்டிருக்கிறார். நரசிம்மரையும், இரண்டு ஆஞ்சநேயர்களையும் வழிபட்டால் பயம் நீங்கும், செயல்களில் வெற்றி உண்டாகும்.