மதுரை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நேற்று மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முக்குறுணி விநாயகருக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. மடப்பள்ளியில் ௧௮ படி அரிசியில் தயாரித்த மெகா சைஸ் கொழுக்கட்டையை விநாயகருக்கு படையலாக வைத்து சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. ஏற்பாடுகளை கோயில் இணை கமிஷனர் நடராஜன் தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.