உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவில் சதுர்த்தி விழா: பக்தர்கள் நேர்த்திகடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18செப் 2015 11:09
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவையொட்டி வெள்ளி மூஷிக, கேடகம், சிம்ம, மயில், யானை, ரிஷப, காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் விநாயகர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் எட்டாம் நாளில் சித்தி,புத்தி தேவியருடன் விநாயகருக்கு திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து விநாயகர் தேவிகள் இருவருடன் குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து காட்சியளித்தார். ஒன்பதாம் நாளான நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது.விழாவின் கடைசிநாளான நேற்று சுவாமிகள் தீர்த்தவாரி நடந்தது. மோர்ப்பண்ணை கடலில் வெயிலுகந்த விநாயகர் பக்தர்களுடன் புனித நீராடி காளை (கோரதம்)வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடலில் புனித நீராடிய பக்தர்கள் வேல், பால்குடம், காவடி எடுத்தும் கோவில் முன்பு தீ மிதித்தும் நேர்த்திகடன் நிறைவேற்றினர். உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில் மட்டுமே பத்தர்கள் தீ மிதித்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கதாகும். விழாவில் பக்தர்கள் ஏராளமானபேர் பங்கேற்றனர்.