சோழவந்தான் : சோழவந்தான் பிரளயநாதர் சுவாமி சிவன் கோயிலில், 8 அடி உயர பூர்ணகும்ப விநாயகர் சிலை பிரதிஷ்டை யாகபூஜை நடந்தது. எம்.வி.எம்., குழும தலைவர் மணிமுத்தையா, நிர்வாகி வள்ளிமயில் தலைமை வகித்தனர். சிலைகள் ஆற்றில் கரைக்கப்பட்டன. கலைவாணி மெட்ரிக் பள்ளி தாளாளர் மருதுபாண்டியன், விழா பொறுப்பாளர்கள் முருகேசன், ஜெயக்கொடி, கணேசன் பங்கேற்றனர். திருவேடகம் விவேகானந்தா கல்லுாரி சார்பில் முள்ளிப்பள்ளத்தில் நடந்த பூஜையை கல்லுாரி செயலாளர் நியமனாந்தாமகராஜ் துவக்கினார். முதல்வர் ராமமூர்த்தி, ஊராட்சி துணைதலைவர் ராஜா, ரஜினிகாந்த், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வடிவேல், மணிகண்டன் பங்கேற்றனர்.