பதிவு செய்த நாள்
25
செப்
2015
12:09
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், நேற்று, தேசிகருக்கு சாற்றுமறை உற்சவம் நடைபெற்றது. காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில், கடந்த, 15ம் தேதி ஆரம்பித்த தேசிகர் அவதார உற்சவத்தில், நேற்று, கடைசி நாள் தேசிகருக்கு சாற்றுமறை உற்சவம் மற்றும் மரியாதை நிகழ்ச்சி நடைபெற்றது.இதை முன்னிட்டு, நேற்று காலை, காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோவிலில் இருந்து, துாப்புல் வேதாந்த தேசிகர் புறப்பட்டு, பெருமாள் கோவிலில் எழுந்தருளினார். இரவு, 7:00 மணியளவில், திருமலையில் இருந்து, வரதராஜ பெருமாளுடன் தேசிகர் இறங்கி வந்தார். பின், ஆழ்வார் பிரகாரம் சுற்றி தேசிகர், விளக்கொளி பெருமாள் கோவிலுக்கு சென்றடைந்தார். அதன்பின், கோவில் தேசிகருடன் வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் மாடவீதி ஆஞ்சநேயர் கோவிலுக்கு, இரவு, 8:30 மணியளவில் சென்று வந்தார். பின், இரவு 12:00 மணி வரை சாற்றுமறை உற்சவம் நடைபெற்றது.