கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி செம்பொற்சோதிநாதர் கோவிலில் மழை வேண்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலத்தில் அமைந்துள்ள செம்பொற்சோதிநாதர் கோவிலில் மழை மற்றும் மக்கள் நலன் வேண்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. சிவகாமி அம்மை உடனுறை நடராஜர், திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர், திருநாவுக்கரசு சாமிகளின் உற்சவர்களுக்கு மலர்களால் அலங்காரம் செய்து, தமிழ் முறைப்படி வழிபாடுகள் நடந்தது. தொடர்ந்து பன்னிரு திருமுறை விண்ணப்பித்து, திருவாசகம் பாடி, வன்ன மலர்களால் அலங்கரித்த நடராஜர், சிவகாமி அம்மை, மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர் சுவாமிகளுக்கு வழிபாடு நடத்தினர். சங்கு, கயிலை வாத்தி யம், முழவு, கஞ்சிரா, பிரம்மதாளம் வாசித்து பூஜைகள் நடந்தது.