பதிவு செய்த நாள்
29
செப்
2015
10:09
திருத்தணி: திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு நடந்து செல்லும் படிகளில் அமைக்கப்பட்ட, நான்குகால் மண்டபம் சேதமடைந்து, எந்த ÷ நரத்திலும் இடிந்து விழும் அபாயம் உள்ளதால், பக்தர்கள் அச்சத்துடன் செல்கின்றனர். திருத்தணி முருகன் கோவிலுக்கு, தினசரி பல்லாயி ரக்கணக்கான பக்தர்கள், மூலவரை தரிசித்து செல்கின்றனர். இதில், பெரும்பாலான பக்தர்கள், மலைப்படிகள் வழியாக நடந்து மலைக்கோவிலுக்கு செல்வர். பக்தர்களுக்கு வசதியாக மலைக்கோவிலுக்கு, செல்ல, 365 படிகள் அமைத்துள்ளனர். நடந்து செல்லும் பக்தர்கள் இளைப்பாறுவதற்கு, படிகளில் ஆங்காங்கே மண்டபங்கள் மற்றும் கோபுரம் அமைத்து உள்ளனர். அந்த வகையில் சரவணப்பொய்கை என்கிற திருக்குளத்தில் இருந்து, மலைப்படிகளில் செல்லும் வழியில் நாட்டுக்கோட்டை செட்டித் தெரு அருகே, நான்குகால் மண்டப படிகள் அமைக்கும் போதே அமைக்கப் பட்டது.இந்த மண்டபத்தை, கோவில் நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், தற்போது மண்டபத்தின் மேற்பகுதியில் சிமென்ட் காரைகள் பெயர்ந் து, கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும், பக்தர்கள் மண்டபம் வழியாக நடந்து செல்லும் போது, அங்கு உட்காரும் பக்தர்கள் மீது சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுகிறது. எனவே, சேதமடைந்த மண்டபத்தை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.