புரட்டாசி மாதம் தேய்பிறை பிரதமை திதி துவங்கி, அமாவாசை வரையான 15 நாட்கள் மகாளய பட்ச காலம் ஆகும். இந்த காலத்தில் நம் முன்னோர்கள் அனைவரும் பூலோகத்திற்கு வருவதாக ஐதீகம். அவர்களை வரவேற்று வணங்கும் காலம் இது. இந்த நாட்களில் தர்ப்பணம், சிராத்தம் முதலானவை செய்வர். தீர்த்தக்கரைகள் உள்ள ஊர்களுக்கு அவரவர் இறந்த திதியன்று சென்று தர்ப்பணம், சிராத்தம் செய்து வந்தால், நம் வம்சம் வாழையடி வாழையாக தழைக்கும். செல்வம் சேரும். முன்வினை பாவங்கள் தீரும். இதை தவறாமல் எல்லாரும் அனுஷ்டிக்க வேண்டும்.