பழநி: தமிழகத்தில் வாயுபுத்திரன் வீரஅனுமனுக்கு பல இடங்களில் கோயில்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்தது. அந்தவரிசையில் மேற்குத்தொடர்ச்சி மலையின் பின்னணியில் இயற்கை எழில் சூழ்ந்த பழநி பாலாறு-பொருந்தலாறு அணை அருகே வீர ஆஞ்சநேயர் கோயில் தனிசிறப்பு வாய்ந்ததாக உள்ளது. புராண காலத்தில் பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் வந்தபோது மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் (தற்போது பாலாறு அணை) ஓய்வுஎடுத்தனர். அப்போது பீமன் ஆணவத்தை அழித்த அனுமனே, பீமனுக்கு வீர ஆஞ்சநேயராக காட்சியளித்தார். சித்ரா பவுர்ணமி, அனுமன்ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடக்கிறது.
கோயில் பூஜாரி ஆர்.ரவி கூறுகையில், பஞ்சபாண்டவர்களின் வனவாசத்தின்போது தாராபுரம், ஐவர்மலை வனப்பகுதியில் தங்கியுள்ளனர். இதற்கு சான்றாக மலை குகைகள், கல்வெட்டுகள் உள்ளன. அப்போது பாலாறு பகுதி அடர்ந்த வனமாக இருந்தது. 10 ஆயிரம் யானைகள் பலம் கொண்ட பலசாலி பீமன் தன்னை வெல்ல யாரும் இல்லை என ஆணவத்துடன் இருந்தார். அவருக்கு பாடம் புகட்ட நினைத்த அனுமன், பீமன் செல்லும் வழியில் ஒரு முதியவர் போல படுத்திருந்தார். பீமன் அவரை எழுப்ப முயன்றபோது தன்னுடைய வாலை நகர்த்தும்படி கூறியுள்ளார். பீமனால் வாலை அசைக்க முடியவில்லை. முதியவரை வணங்கிய பீமன், என்னை சோதிக்கும் பெரியவர் யார் என வணங்கிகேட்டார். அப்போது ஆஞ்சநேயர் பீமன் உள்ளிட்ட பஞ்சபாண்டவர்களுக்கு தரிசனம் தந்தார். அவ்விடத்தில் சஞ்சீவி மலையை ஒருகையில் ஏந்தியும், மற்றொரு கையில் ஆசி வழங்கும் நிலையில் பெரியமலை குடைந்து வீரஆஞ்சநேயர் சிலை, அவரது வால்பகுதியில் தத்ரூபமாக கல்மணியும் செதுக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரையும், வி÷Œஷ நாட்களில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை நடைதிறந்து இருக்கும்,என்றார். தொடர்புக்கு: 87608 17887.