Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீட்டில் சண்டை வராமல் இருக்க ... அழித்தது அனுமன் அளித்தது ஆஞ்சநேயன்! அழித்தது அனுமன் அளித்தது ஆஞ்சநேயன்!
முதல் பக்கம் » துளிகள்
மூட்டு வலிக்கு ஒரு பாட்டு!
எழுத்தின் அளவு:
மூட்டு வலிக்கு ஒரு பாட்டு!

பதிவு செய்த நாள்

29 செப்
2015
12:09

மூட்டு வலி, தோள்பட்டை வலி, இடுப்பு வலி, எலும்பு முறிவு, இளம்பிள்ளைவாதம், பக்கவாதம்  போன்ற நோய்கள் தீர்வதற்கு படிக்க வேண்டிய சம்பந்தரின் பதிகம் இது. காஞ்சிபுரத்தில் இருந்து கீழ்ரோடு வழியாக உத்திரமேரூர் செல்லும் வழியில் 16 கி.மீ., தூரத்திலுள்ள திருமாகறல் மாகறலீஸ்வரர், திரிபுவன நாயகியை நினைத்து பாட வேண்டும்.

விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள்
பாடல்விளை யாடல் அரவம்,
மங்குலொடு நீள கொடிகள் மாடம்மலி
நீடுபொழில் மாகறல் உளான்
கொங்கு விரி கொன்றையொடு கங்கை வளர்
திங்கள் அணி செஞ்சடையினான்;
செங்கண் விடை அண்ணல் அடி சேர்பவர்கள்
தீவினைகள் தீரும் உடனே.

கலையின் ஒலி மங்கையர்கள் பாடல் ஒலி
ஆடல் கவின் எய்தி அழகு ஆர்
மலையின் நிகர் மாடம் உயர் நீள்கொடிகள்
வீசும் மலி மாகறல் உளான்;
இலையின் மலி வேல் நுனைய சூலம் வலன்
ஏந்தி எரி புன்சடையினுள்
அலைகொள் புனல் ஏந்து பெருமான், அடியை
ஏத்த வினை அகலும் மிகவே.

காலையொடு துந்துபிகள் சங்கு, குழல்,
யாழ், முழவு காமருவு சீர்
மாலை வழி பாடுசெய்து மாதவர்கள்
ஏத்தி மகிழ் மாகறல் உளான்
தோலை உடை பேணி அதன் மேல் ஓர்சுடர்
நாகம் அசையா அழகிதாப்
பாலை அன நீறுபுனை வான், அடியை
ஏத்த வினை பறையும் உடனே.

இங்கு கதிர் முத்தினொடு பொன்மணிகள்
உந்தி எழில் மெய்யுள் உடனே
மங்கையரும் மைந்தவர்களும் மன்னுபுனல்
ஆடி மகிழ் மாகறல் உளான்
கொங்கு வளர் கொன்றை குளிர்
திங்கள் அணி
செஞ்சடையினான் அடியையே
நுங்கள் வினை தீரமிக ஏத்தி வழி
பாடு நுகரா எழுமினே.

துஞ்சு நறு நீலம் இருள் நீங்க ஒளி
தோன்றும் மது வார் கழனிவாய்,
மஞ்சுமலி பூம்பொழிலில் மயில்கள் நடம்
ஆடல் மலி மாகறல் உளான்;
வஞ்சமத யானைஉரி போர்த்து மகிழ்
வான் ஓர் மழுவாளன் வளரும்
நஞ்சம் இருள் கண்டம் உடை நாதன் அடி
யாரை நலியா வினைகளே.

மன்னும் மறை யோர்களொடு பல்படிம
மாதவர்கள் கூடி உடனாய்
இன்ன வகை யால்இனிது இறைஞ்சி, இமையோரில்
எழு மாகறல் உளான்
மின்னை விரி புன்சடையின் மேல் மலர்கள்
கங்கையொடு திங்கள் எனவே
உன்னுமவர் தொல் வினைகள் ஒல்க உயர்
வான்உலகம் ஏறல் எளிதே.

வெய்யவினை நெறிகள் செல வந்து
அணையும்
மேல் வினைகள் வீட்டல் உறுவீர்,
மைகொள் விரி கானல் மது வார்கழனி
மாகறல் உளான் எழில் அது ஆர்
கையகரி கால் வரையில் மேலது உரிதோல்
உடையமேனி அழகு ஆர்
ஐயன்அடி சேர்பவரை அஞ்சி அடையா
வினைகள் அகலும் மிகவே.

 தூசு துகில் நீள்கொடிகள் மேகமொடு
தோயவன பொன் மாடமிசையே
மாசுபடு செய்கை மிக மாதவர்கள்
ஓதிமலி மாகறல் உளான்
பாசுபத இச்சை வரி நச்சு அரவு
கச்சை உடை பேணி அழகுஆர்
பூசுபொடி ஈசன் என ஏத்தவினை
நிற்றல் இல, போகும் உடனே.

தூய விரி தாமரைகள் நெய்தல் கழுநீர்
குவளை தோன்ற மது உண்
பாய வரி வண்டுபல பண்முரலும்
ஓசைபயில் மாகறல் உளான்
சாய விரல் ஊன்றிய இராவணன்
தன்மை கெட நின்ற பெருமான்
ஆய புகழ் ஏத்தும் அடியார்கள் வினை
ஆயினவும் அகல்வது எளிதே.

காலின் நல பைங்கழல்கள் நீள்முடியின்
மேல் உணர்வு காமுறவினார்
மாலும் மலரானும் அறியாமை எரி
ஆகி உயர் மாகறல் உளான்
நாலும் எரி தோலும் உரி மா மணிய
நாகமொடு கூடி உடனாய்
ஆலும் விடை ஊர்தி உடை அடிகள்
அடியாரை அடையா வினைகளே.

 கடைகொள் நெடு மாடம் மிக ஓங்குகமழ்
வீதி மலி காழியவர் கோன்,
அடையும் வகை யால், பரவி அரனை அடி
கூடு சம்பந்தன் உரையால்,
மடைகொள் புனலொடு வயல்
கூடு பொழில்
மாகறல் உளான் அடியையே
உடையதமிழ் பத்தும் உணர்வார் அவர்கள்
தொல்வினைகள் ஒல்கும் உடனே.

 
மேலும் துளிகள் »
temple news
திருவோணம் பெருமாள் வழிபாட்டிற்கான சிறந்த நாள். திருவோண நட்சத்திரத்தில் பெருமாளுக்கு விரதமிருந்து ... மேலும்
 
temple news
பகவான் உறங்க ஆரம்பித்தது முதல் எழுந்திருக்கும் வரை ஆற்ற வேண்டிய விரதம் சாதுர் மாஸ்ய விரதம். ஒவ்வொரு ... மேலும்
 
temple news
சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷம் சிறப்பு மிக்கது. ஆதியில் அமுதம் கடைந்தபோது அதில் எழுந்த ... மேலும்
 
temple news
கர்நாடகாவின் வட மாவட்டமான பெலகாவி, வெயில் மாவட்டமாக கருதப்படும். இங்கு கோவில்களுக்கும் பஞ்சம் இல்லை. ... மேலும்
 
temple news
பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் நாடபிரபு கெம்பேகவுடா கிராஸ், 4வது பிளாக் அஜ்வானி ரோட்டில் உள்ளது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar