பதிவு செய்த நாள்
20
அக்
2015
11:10
பல்லாவரம் : பல்லாவரத்தில், பிரமிக்க வைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள, பிரபஞ்ச சக்தி கொலுவை, தினசரி ஏராளமானோர் பார்வையிட்டு செல்கின்றனர். பழைய பல்லாவரம், பல்லவா கார்டன், மூன்றாவது அவென்யூ பகுதியை சேர்ந்தவர் ஆர்.பத்ரி நாராயணன், 58. அவர், தான் வசிக்கும் வீட்டு மாடியில், ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதில், பிரபஞ்ச சக்தி கொலு அமைத்துள்ளார். தான் பணியாற்றிய காலத்தில், பல வட மாநிலங்களுக்கு சென்றபோது சேகரித்த பொருட்களை வைத்து, இந்த கொலுவை பத்ரி நாராயணன் அமைத்துள்ளார்.பிரபஞ்ச சக்தியின் அடையாளங்களான குகைக் கோவில், பிரமாண்ட மலை, பாதாள குகை, நீர்வீழ்ச்சி, நெருப்பு, காற்று, விண்வெளி, பனிமலை ஆகியவை இடம் பெற்றுள்ளன.மேலும், குகைக்குள் செல்லும் போது, இயற்கையான ஒரு குகைக்குள் செல்வது போல் ஒரு உணர்வு ஏற்படுகிறது. பல்வேறு விதமான லிங்கங்கள், ஸ்படிகம், ருத்ராட்சம், வண்ணமயமான படிக கற்கள், பிரமிடு, கடல்வாழ் பொருட்கள் என, பல வித்தியாசமான பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன. தினசரி, 50க்கும் மேற்பட்டோர் இந்த கொலுவை பார்வையிட்டு செல்கின்றனர். இரண்டு மாதங்கள் வரை இந்த கொலு வைக்கப்பட்டிருக்கும். தொடர்புக்கு: 95515 55898