நெல்லை சரஸ்வதி கோயிலில் வித்யாரம்பம் கல்வி துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22அக் 2015 01:10
திருநெல்வேலி: நெல்லையில் சரஸ்வதி கோயில் மற்றும் நெல்லையப்பர் கோயிலில் நடந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியில் திரளான பெற்றோர்கள் பங்கேற்றனர்.
தமிழகத்திலேயே சரஸ்வதிக்கு என தனியாக உள்ள கோயில் திருநெல்வேலி டவுன் நெல்லையப்பர் கோயிலுக்கு எதிர்புறம் அமைந்துள்ளது. பழமையான இந்த கோயிலை தனியார் நிர்வகித்து வருகின்றனர். கல்விக்கு உகந்த நாளான விஜயதசமி நாளில், சிறார்களுக்கு ஆரம்பக்கல்வியின் பாலபடத்தை கற்பித்தல் சிறப்பானதாகும். சரஸ்வதி கோயிலில் வித்யாரம்பம் எனப்படும் குழந்தைகளுக்கு கல்வியை கற்பித்தல் பணியை துவக்கினர். இதற்காக அரிசியில் குழந்தைகளின் விரல் பிடித்தும், மஞ்சள் துண்டு மூலமும் ‘அ..ஆ..‘ என தமிழின் முதல்எழுத்துக்கள் கற்றுத்தரப்பட்டன. இதே போல திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஆறுமுகநயினார் சன்னதியில் நடந்த நிகழ்ச்சியிலும் குழந்தைகளுக்கு பாலபாடம் கற்றுத்தரும் நிகழ்வு நடந்தது. இதில் திரளான பெற்றோர்கள் பங்கேற்றனர்.