திருவரங்கம் ரங்கநாதபெருமாள் கோவிலில் சுவாமி வீதியுலா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24அக் 2015 10:10
ரிஷிவந்தியம்: திருவரங்கம் கிராமத்தில் உள்ள ரங்கநாதபெருமாள் கோவிலில் நவராத்திரி 10ம் நாள் உற்சவம் நடந்தது. ரிஷிவந்தியம் அடுத்த தி ருவரங்கத்தில் உள்ள பழமை வாய்ந்த ரங்கநாதபெருமாள் கோவிலில், நவராத்திரி விழாவையொட்டி, கொலு அமைக்கப்பட்டது. தொடர்ந்து 9 நாட்கள் மூலவர் மற்றும் உற்சவர் பெருமாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து 10ம் நாளான நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில் சுவாமி வீதியுலா நடந்தது. முன்னதாக மாலை 6 :00 மணிக்கு குதிரை வாகனத்தின் மீது உற்சவர் ரங்கநாதபெருமாள் சிலை அமைக்கப்பட்டு, 7:35 மணிக்கு கோவில் வளாகத்தின் முன் அம்புகுத்தி திருவிழா நடந்தது. கோவில் பட்டாச்சியர் ரங்கநாதன் வாழை மரத்தில் அம்பு எய்தினார். தொடர்ந்து பக்தர்கள் சுவாமியை தோலில் சுமந்தபடி முக்கிய தெருக்களின் வழியாக சென்றனர். திருக்கோவிலுõர் டி.எஸ்.பி., கீதா, இன்ஸ்பெக்டர் தங்கம் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழா ஏற்பாடுகளை சேஷலஷ்மிகுமார் மற்றும் குழுவினர் செய்திருந்தார்.