பதிவு செய்த நாள்
27
அக்
2015
11:10
பழநி: பழநி மலைக்கோயிலில் உண்டியலில் 25 நாட்களில் ரூ. ஒரு கோடியே 63 லட்சத்து 38 ஆயிரம் வசூலாகியுள்ளது. பழநி மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. இதில் தங்கம் 588 கிராம், வெள்ளி 10 ஆயிரத்து 900 கிராம், வெளிநாட்டு கரன்சி 1176 மற்றும் ரொக்கமாக ரூ. ஒருகோடியே 63 லட்சத்து 38 ஆயிரத்து 710 கிடைத்துள்ளது. தங்கத்திலான வேல், தொட்டில் உட்பட நகைகள், நாணயம், மற்றும் வெள்ளியிலான தொட்டில், முருகன் சிலைகள், பாதம், ஆள் உருவம், கப்பல், வேல், கொலுசு உள்ளிட்ட பொருட்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டு இருந்தன. இணை ஆணையர் ராஜமாணிக்கம், திண்டுக்கல் உதவி ஆணையர் சிவலிங்கம் மற்றும் கோயில் அலுவலர்கள் பங்கேற்றனர்.