தமிழ் கடவுள் முருகப் பெருமானுக்கு அறுபடை வீடுகள் இருப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அவரது அண்ணனான முழுமுதற் கடவுள் விநாயகருக்கும் அறுபடை வீடுகள் உள்ளன. திருவண்ணாமலை, திருமுதுக்குன்றம், திருக்கடவூர், திரு ஆலவாய், பொதுவீடு, திருநாறையூர் ஆகிய தலங்கள் விநாயகப் பெருமானின் அறுபடை வீடுகளாகப் போற்றப்படுகின்றன.