வேல் என்றால் வெற்றி என்று பொருள். முருகனுக்கு வேல்! வேல்! கந்தனுக்கு வேல்! வேல்! வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என்று முருக பக்தர்கள் கோஷம்எழுப்புவதைக் கேட்டிருப்பீர்கள். வெற்றி இருக்கும் இடத்தில் வடிவேலன் இருப்பான்.வெற்றியையும் (வேலினையும்) முருகனையும் யாராலும் பிரிக்க முடியாது என்பதே இதன் பொருள். வேல் என்ற பெயரால், வேலாயுதம், வெற்றிவேல், தங்கவேல், கந்தவேல் என்று குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவது வழக்கம்.வேலு(ம்) மயிலும் என்ற ஆறெழுத்துமந்திரத்தை தொடர்ந்து உச்சரிப்போருக்குமுருகனின் அருளால் வாழ்வில் வெற்றி மட்டுமே உண்டாகும். இதை சொல்லும் போதும் என்ற எழுத்தை ஓசை குறைத்து சொல்ல வேண்டும் என்பது நியதி.