ஜவாயுபுரீஸ்வர சுவாமி கோவில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09நவ 2015 10:11
காரைக்கால்:ஜவாயுபுரீஸ்வர சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பணிகள் சிறப்பாக நடந்து வருகின்றன.காரைக்கால் திருமலைராயன்பட்டினம் மையாடுங்கண்ணி அம்பாள் உடனமர் ஜடாயுபுரீஸ்வர சுவாமி திருக்கோவில், மெய்கண்ட விநாயகர் ஆலயம் மற்றும் நிறுத்தன காளியம்மன் ஆலய கும்பாபிஷேகம் வரும் டிச.6ம் தேதி நடக்கிறது. இதையொட்டி திருப்பணி வேலைகள் சிறப்பாக நடந்து வருகிறது. தண்டாபாணி சந்நதியில் புதிதாக பெரிய மகா மண்டபம் கட்டப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்திற்காக பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.