பதிவு செய்த நாள்
12
நவ
2015
10:11
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவிலில், சுவாதியை முன்னிட்டு, சுதர்சன தன்வந்திரி ஹோமம் நடந்தது. விழுப்புரம் அடுத்த, பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், சுவாதியை முன்னிட்டு, நேற்று காலை 6:00 மணிக்கு, மூலவருக்கு அபிஷேகம், 8:00 மணிக்கு, மூலவர் நரசிம்மருக்கு தங்க கவசம் அணிவித்து, சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை நடந்தது. உற்சவர் வரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நரசிம்ம பெருமாளுக்கு ஹோமம், சுதர்சன தன்வந்திரி ஹோமம், சுக்த ஹோமம் ஆகியவை நடந்தது. பகல் 12:30 மணிக்கு, கடம் புறப்பட்டு, மூலவருக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி, தலைமை அர்ச்சகர் பார்த்தசாரதி பட்டாச்சாரியார் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.