அம்மச்சார் அம்மன் கோவிலில் கேதார நோன்பு அனுசரிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12நவ 2015 11:11
விழுப்புரம்: விழுப்புரம் அம்மச்சார் அம்மன் கோவிலில், கேதார நோன்பு நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டது. ஆண்டுதோறும் தீபாவளி அடுத்து வரும் அமாவாசையன்று கேதார நோன்பு அனுசரிக்கப்படுகிறது. இந்தாண்டிற்கான கேதார நோன்பு நிகழ்ச்சி நேற்று விழுப்புரம் மந்தக்கரை அம்மச்சார் அம்மன் கோவிலில் நடந்தது. அம்மச்சார் அம்மன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பின், நகர பெண்கள் 21 வகையான காய்கறிகளை கொண்டு அம்மனுக்கு வழிபாடு செய்தனர். சிலர் தங்கள் வீடுகளிலேயே கேதார நோன்பை கொண்டாடினர்.