பதிவு செய்த நாள்
20
நவ
2015
03:11
இந்தக் கேள்விக்கு விடை இல்லைமேலும் பல தெய்வங்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கும் வழிபாடுகள் நடக்கின்றன. என்பதுதான் வருடாவருடம் சபரியாத்திரை சென்று ஐயப்பனை தரிசித்துவிட்டு வரும் பக்தர்கள் பலருக்கும் கூட தெரிந்திருக்காத அந்த விவரங்கள் இதோ-
ஐயனை மணக்கக் காத்திருக்கும் கன்னித் தெய்வம் மாளிகைபுரத்து அம்மன், மஞ்சள் மாதா யார் தெரியுமா? ஐயப்பனால் வதைக்கப்பட்ட மகிஷியின் மாறிய வடிவம்தான் அதாவது மகிஷியை ஐயப்பன் வதைத்ததும் அழகிய கந்தவர்க் கன்னியாக அவள் உருமாறினாள். ஐயனை மணந்திடவே தான் வடிவெடுத்ததாகச் சொல்லி வேண்டினாள். கன்னிசாமி வராத ஆண்டில் அவளை மணப்பதாகச் சொன்னார். மணிகண்டன் அதற்காகக் காத்திருக்கும் தேவியே மாளிகைபுரத்தம்மன். இந்த அன்னையின் சன்னதியைச் சுற்றி தேங்காயை உருட்டுகிறார்கள் பக்தர்கள் கன்னிப்பெண்களுக்கு மங்கலப் பொருட்களை அளிப்பதுபோல் வெற்றிலை மஞ்சள்பொடி, குங்குமம், பட்டு வஸ்திரம், ஆகியவற்றை இங்கே காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.
பொதுவாக எல்லா கோயில்களிலுமே கன்னிமூலையில் கணபதிதான் இருப்பார். சபரி மலையில் ஐயப்பன் சன்னதியின் இடதுபுறம் கன்னிமூலையில் கம்பீரமாக வீற்றிருக்கும் விநாயகரே கன்னிமூல கணபதி என்று பக்தர்களால் போற்றப்படுவர். பக்தர்கள் இவர் முன் தோப்புக்கரணமிட்டு நெய்த்தேங்காய் உடைத்து ஒரு பகுதியை அக்னி குண்டத்தில் சேர்க்கிறார்கள். (இருமுடியில் சுமந்து சென்று ஐயப்பனுக்குச் செய்யப்படும் நெய் அபிஷேகத்தேங்காய் வேறு இது வேறு) கொச்சுக் கடுத்தசுவாமி வலிய கடுத்த சுவாமி என இரு காவல் தெய்வங்களுக்கும் சன்னதி இருக்கிறது. அந்த சன்னதிகளில் கதலிப்பழம் அதாவது வாழைப் பழம் அவல், தேங்காய் சர்க்கரை உலர்திராட்சை, கல்கண்டு போன்றவற்றைச் சமர்ப்பித்து வழிபடுகின்றனர்.
மலைநடை பகவதி அம்மன் சன்னதியில் விளக்கு ஏற்றுவதையே காணிக்கை என்கின்றனர். அரச மரத்தின் கீழ் அமைந்துள்ள நாகர்களை வழிபடுவது போலவே இங்கே தனிச் சன்னதி கொண்டுள்ள நாகராஜாவை மஞ்சள் பொடியினால் அர்ச்சித்து கற்பூரம் ஏற்றி வணங்குகின்றனர். சத்தியமான பொன்னு பதினெட்டாம் படிகளுக்குக் கீழே ஐயப்பனின் தோழரான வாபரின் சன்னதி இருக்கிறது. இஸ்லாமியரால் பூஜை வழிபாடுகள் செய்யப்படும் இந்த சன்னதியில் நெல் மிளகு சந்தனம், சாம்பிராணி பன்னீர் நெய் தேங்காய் போன்றவற்றை ஐயப்ப பக்தர்கள் அளித்து ஆராதனை செய்வதுண்டு. சபரிமலையை ஐயப்பனின் பூங்காவனம் என்பது மரபு இந்த நந்தவனத்தினைச் சுற்றி ஏழு கோட்டைகள் இருக்கின்றன. பேரூர் தோட்டம் எனும் இடத்தில் தொடங்கும் இந்தப் பூங்கா வனத்திற்கு கோட்டபுரம், காளகட்டி, உடும்பாறமலை, கரிமலை, சபரிபீடம், சரங்குத்தி இவற்றோடு திருப்படியையும் சேர்த்து ஏழு கோட்டைகள் என்று சொல்வார்கள். அறிவு, ஒழுக்கம் நற்சிந்தனை, பக்தி, சோம்பலற்ற முயற்சி, நற்குணம், தெய்வ அருள் இவை எல்லாம் பக்தர்களின் வாழ்க்கை சிறந்துவிளங்கிட காவல் நிற்கும் ஏழு கோட்டைகள் என்பதை இந்தத் தத்துவம் உணர்த்துவதாக குறிப்பிடுவதுண்டு.