புட்டபர்த்தி: பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 90 வது பிறந்த நாளை முன்னிட்டு புட்டபர்த்தில் உள்ள ஹில்வியூ ஸ்டேடியத்தில் கூடியிருந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் அவரது திருஉருவ படம் தங்கரதத்தில் வைத்து கொண்டுவரப்பட்டது. அப்போது ெஹலிகாப்டரில் இருந்து மலர் தூவப்பட்டது.
ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 90வது பிறந்த நாளை ஒட்டி 23ம் தேதி மாலை 90 இசை கலைஞர்கள் பங்கேற்கும் சிறப்பு சிம்பொனி இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. காலை ஹில் வியூ அரங்கில் தங்க ரத ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் பகவானின் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்களால் வேதம் முழங்க, பஜனை மற்றும் பாடல்கள் பாடப்பட்டது. தொடர்ந்து சிறப்பு விருந்தினர் உரை மற்றும், பகவானின் அருளுரை ஒலிபரப்பப்பட்டது. தொடர்ந்து டாக்டர் எல்.சுப்ரமணியனின் அவதார் என்ற சிம்போனி நிகழ்ச்சி இடம் பெறும். மாலையில் ஜூலா மகோற்சவம் நடைபெறும். தொடர்ந்து சர்வதேச இசைக் கலைஞர்கள் 90 பேர் பங்கேற்கும் சிறப்பு சிம்பொனி நிகழ்ச்சி நடைபெறும். நிறைவாக வான வேடிக்கை இடம் பெறும். 24ம் தேதி காலை ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை சார்பில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். மாலையில் உஸ்தாத் ஜாகிர் உசேன் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெறும்.