பதிவு செய்த நாள்
03
டிச
2015
10:12
சபரிமலை: சபரிமலையில் குறைந்த கட்டணம் நெய்யபிஷேகத்துக்கும், அதிக கட்டணம் படிபூஜைக்கும் வசூலிக்கப்படுகிறது.கட்டண விபரம் வருமாறு: நெய்யபிஷேகம் தேங்காய் ஒன்றுக்கு (ரூபாயில்)10, சுகஸ்ரநாம அர்ச்சனை, அஷ்டோத்தரா அர்ச்சனை 20, பஞ்சாமிர்த அபிஷேகம் 20, கணபதிஹோமம் 200, துலாபாரம் ரூ.250, முழுக்காப்பு 500, உஷபூஜை 501, பகவதிசேவை 1000, அஷ்டாபிஷேகம் (பொருட்கள் தவிர்த்து ) 2000, நித்யபூஜை 2501, களபாபிஷேகம் (பொருட்கள் பக்தர்கள் கொண்டுவரவேண்டும் )3000, அஷ்டாபிஷேகம் (பொருட்களுடன் சேர்த்து) 3500.லட்சார்ச்சனை 4000, தங்க அங்கி சார்த்து 7500, புஷ்பாபிஷேகம் 8500, உற்சவபலி 10,000, சகஸ்ரகலசம் 25,000, உதயாஸ்மனபூஜை 25,000, படிபூஜை 40,000.பிரசாத கட்டணம்: வெள்ளைச்சோறு 10, விபூதி பிரசாதம் 15, சர்க்கரை பாயாசம் 15, அப்பம் 25, பஞ்சாமிர்தம் 50, அபிஷேக நெய் 100 மில்லி 50, அரவணை ஒரு இந்த ஆண்டு முதல் கணபதிஹோமம், உஷபூஜை, நித்யபூஜை போன்ற முக்கிய பூஜைகள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. இதுபோல அப்பம், அவரணை பிரசாதமும் ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியும்.