பதிவு செய்த நாள்
03
டிச
2015
10:12
சென்னிமலை: சென்னிமலை அடுத்த எக்கட்டாம்பாளையத்தில் உள்ள, பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில், பொங்கல் விழா கடந்த மாதம், 17ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. பிறகு, 25ம் தேதி இரவு கோவிலின் முன்பு, கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. மேலும், அம்மனுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில், சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் வைபவம் இன்று காலை நடக்கிறது. இதில் எக்கட்டாம்பாளையம், புதுவலசு, அண்ணாமலைபாளையம், தாமரைக்காட்டுவலசு உள்ளிட்ட பகுதி மக்கள், மாரியம்மனுக்கு ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டு, பொங்கல் வைத்து வழிபடுவர். இரவே கம்பம் பிடுங்கப்பட்டு, நொய்யல் ஆற்றில் விடப்படுகிறது.