பதிவு செய்த நாள்
07
டிச
2015
12:12
பண்ருட்டி: பண்ருட்டி ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவிலில், நேற்று நடந்த மகா கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கும்பாபி ஷேக விழா, கடந்த 2ம் தேதி காலை, முதல் யாக சாலை பூஜையுடன் துவங்கியது. 3ம் தேதி காலை புண்யாஹம், உக்த ஹோமங்கள், மாலை 5:30 மணிக்கு பிரதான ஹோமம் நடந்தது. 4ம் தேதி காலை 8:00 மணிக்கு விமான கோபுர கலசம் படிய வைத்தல், அஷ்டபந்தனம் சாத்துதல், ஹோமம், மாலை அக்னி பிரணயனம், 5ம் தேதி மகாசாந்தி ஹோமம், மாலை திருமஞ்சனம், சயனாதிவாசம் நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு கோ பூஜை, யாத்ராதானம், கடம் புறப்பாடாகி, 8:45 மணிக்கு விமானங்களுக்கும், ராஜகோபுரத்திற்கும் கும்பாபிஷேகம், 9:00 மணிக்கு கருவறை மூர்த்திகளுக்கு மகா சம்ப்ரோஷணம் நடந்தது. தொடர்ந்து, கற்பூர ஆரத்தி பிரம்மகோஷம், சாற்றுமுறை சர்வ தரிசனம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு பெருமாள் க ருடவாகன தரிசனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழா ஏற்பாடுகளை, நகரமன்ற தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் உபயதாரர்கள் செய்தனர்.