வத்தலக்குண்டு: மேலக்கோயில்பட்டி புனித சவேரியார் ஆலய நவநாள் விழா சிறப்பாக நடந்தது. மதுரை மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நடந்தது. வட்டார பங்குத் தந்தை சேவியர் முன்னிலை வகித்து சவேரியார் கொடியேற்றினார். அன்னை வேளாங்கண்ணி பள்ளி முதல்வர் ரெக்ஸ்பீட்டர், உதவி பாதிரியார் அருண்அரு ளப்பன் முன்னிலையில் நவநாள் திருப்பலி நடந்தது. மின் அலங்கார சப்பரம் ஊர்வலம் வந்தது. இளைஞர் சார்பாக விளையாட்டு போட்டி கிராமத்தினர் சார்பாக அன்னதானம் நடந்தது. நவநாட்களில் சவேரியார் ஆலயத்தில் ஜெப வழிபாடு நடந்தது.