மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2016 ஜன., 2ல் அஷ்டமி பிரதட்சணத்தையொட்டி சுவாமி புறப்பாடு நடக்கிறது. அன்று காலை 5 மணிக்கு கோயிலிலிருந்து அம்மன், சுவாமி சப்பரங்கள் புறப்பட்டு, யானைக்கல், வடக்கு ெவளி வீதி, குட்ஷெட் தெரு, நாயக்கர் புதுத் தெரு, வக்கீல் புதுத் தெரு, விளக்குத்துாண் வழியாக கீழ மாசி வீதி தேரடி வந்து சேரும். உலக உயிர்களுக்கு சிவபெருமான் படி அளந்த புராண நிகழ்வை விளக்க மார்கழி தேய்பிறை அஷ்டமி நாளில் இவ்விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.