பதிவு செய்த நாள்
17
டிச
2015
10:12
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம் உடன்குடி தேரி குடியிருப்பு பகுதியில் உள்ள கற்குவேல் அய்யனார் கோயிலில் கள்ளர் வெட்டு திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.இந்தாண்டு திருவிழா நவ., 17 ல் துவங்கியது. தினமும் சிறப்பு பூஜை, வில்லிசை நிகழ்ச்சி நடந்தது.
அன்னதானம் வழங்கப்பட்டது.டிச., 14ல் பகல் 11 மணிக்கு ஐவராஜா மாலையம்மன் பூஜையுடன் துவங்கின. மாலையில் சிறப்பு அபிஷேக, ஆராதனை,இரவில் மாக்காப்பு தீபாராதனை நடந்தது. டிச., 15 ல் காலை மகளிர் வண்ண கோலமிடுதல் நிகழ்ச்சி நடந்தது.பகல் 11 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும்,மாலை 6 மணிக்கு மாவிளக்கு, திருவிளக்கு பூஜைகள், இரவில் 9 மணிக்கு உற்சவர் வீதியுலா நடந்தது.நேற்று காலை 6 மணிக்கு கற்கு வேல் அய்யனாருக்கு108 பால்குட ஊர்வலமும், யானை மீது தீர்த்தம் எடுத்து வரப்பட்டது.முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. மாலை 5 மணிக்கு மேல் கோயிலுக்கு பின்புறமுள்ள மணற்குன்றில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். அங்கு கள்ளர்களாக பாவிக்கப்பட்ட இளநீரை வெட்டும் நிகழ்ச்சி நடந்தது. பின் தேரி மண் முழுவதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. இந்த மண்ணை பக்தர்கள் போட்டி போட்டு சேகரித்தனர். இந்த மண்ணை தங்கள் வீடுகள், தொழில் நடக்கும் இடங்கள், விவசாய நிலங்களில் வைத்தால் வாழ்க்கை செழிக்கும், என்பது பக்தர்கள் நம்பிக்கை.