விழுப்புரம்: விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் சுவாமி, காஞ்சி வரதராஜ பெருமாள் சேவையில் அருள்பாலித்தார். விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில், வரும் 21ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதை யொட்டி கடந்த 11ம் தேதி, பகல் பத்து உற்சவம் துவங்கியது. தொடர்ந்து 6ம் நாள் உற்சவத்தை யொட்டி நேற்று காலை 6:00 மணிக்கு வைகுண்டவாசருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. காலை 9:00 மணிக்கு வைகுண்டவாச பெருமாள், காஞ்சி வரதராஜ பெருமாள் சேவை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து 9:30 மணிக்கு தீபாராதனை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் வாசு பட்டாச்சாரியார் செய்திருந்தார்.