பழநி கோயில் பணியிடங்களை நிரப்ப வேண்டும் மாநில கூட்டத்தில் தீர்மானம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17டிச 2015 11:12
பழநி :தமிழக கோயில்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என, தமிழ்நாடு திருக்கோயில் தொழில்நுட்ப பணியாளர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.பழநியில் நடந்த இச்சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்திற்கு தலைவர் மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார். துணை தலைவர் குமார், பொதுசெயலாளர் கணபதி முன்னிலை வகித்தனர்.இதில் வெள்ள நிவாரண நிதியாக ஒருநாள் ஊதியத்தை வழங்குவது. பழநிகோயிலில் இடைநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களை மீண்டும் பணிஅமர்த்த வேண்டும். தமிழக கோயில்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
பழநி வின்ச்-ல் காலிபணியிடங்களை நிரப்பவேண்டும். மாறாக தனியார்வசம் ஒப்படைக்க கூடாது. தனியார் வசம் உள்ள ரோப்கார் பராமரிப்பை கோயில் நிர்வாகம் நடத்த வேண்டும். ஓய்வு ஊதியம் ரூ.ஆயிரம் என்பதை மாற்றி அறநிலையத்துறை பணியாளர்கள் போல வழங்க வேண்டும். இவற்றை நிறைவேற்ற வலியுறுத்தி இந்துசமய அறநிலையத்துறை ஆணையர், அமைச்சருக்கு கடிதம் அனுப்புவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பழநி கிளை தலைவர் முத்துராஜா, செயலர் காமராஜ் மற்றும் பல்வேறு தமிழக கோயில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.