திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் எண்ணெய் பிரசாதம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28டிச 2015 11:12
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெய்வானை அம்மனுக்கு எண்ணெய் காப்பு திருவிழா நேற்று துவங்கியது. உற்சவர் தெய்வானை திருவாட்சி மண்டபத்தில் எழுந்தருளினார். சிவாச்சாரியார்கள் அம்மனுக்கு காப்பு கட்டி, மூலிகை எண்ணெய் சாத்துப்படி செய்தனர். அம்மன் கிரீடத்தில் கருமுடி சாத்துப்படியாகி, வெள்ளி சீப்பால் தலை சீவுதல், தங்க ஊசியால் பல் துலக்குதல், மையிட்டு கண்ணாடி பார்க்கும் நிகழ்ச்சிகள் நடந்தன. திருவிழா நடக்கும் 5 நாட்களும் பக்தர்களுக்கு எண்ணெய் பிரசாதம் வழங்கப்படும்.