பராசக்தி மாரியம்மன் கோவிலில் அய்யப்ப சுவாமிக்கு விளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28டிச 2015 12:12
கடலுார்: கடலுார், புதுக்குப்பம் பராசக்தி மாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை நடந்தது. கடலுார், புதுக்குப்பம் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் உள்ள பராசக்தி மாரியம்மன் கோவிலில் அய்யப்ப சுவாமிக்கு விளக்கு பூஜை மற்றும் கன்னி பூஜை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று முன்தினம் (26ம் தேதி) காலை கணபதி ேஹாமம் நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை விளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து, அய்யப்ப சுவாமி கோவில் உள்புறப்பாடு நடந்தது. இரவு கன்னி பூஜை நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.