Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்த ... சிவகங்கை கோவில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு! சிவகங்கை கோவில்களில் புத்தாண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தாசலம் கோவில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜன
2016
05:01

விருத்தாசலம்: ஆங்கில புத்தாண்டையொட்டி, விருத்தாசலம், கம்மாபுரம் கோவில்களில் நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

Default Image
Next News

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் அதிகாலை ஆழத்து விநாயகர், சுவாமி, தாயார், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. காலை 11:30 மணியளவில் சுவாமி சன்னதி முன், புனிதநீர் கலசம், 108 சங்குகள், வெள்ளி வலம்புரி சங்கு வைத்து, சிறப்பு ேஹாமம் நடந்தது. பின்னர், சுவாமிக்கு சங்காபிஷேம் செய்யப்பட்டு, ராஜ அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.

மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில், காலை 4:00 மணிக்கு கணபதி ேஹாமம், நவக்கிரஹக, லட்சுமி, அதிருத்ரபாராயண ேஹாமம், 5:30 மணிக்கு சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, வெள்ளிக் கவசத்தில் சுவாமிகள் அருள்பாலித்தனர். தொடர்ந்து, காலை 10:30 மணியளவில் முன் மண்டபத்தில் சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் உற்சவர் சுவாமிகளுக்கு மஞ்சள், அரிசி மாவு, சர்க்கரை, நெய், பஞ்சாமிர்தம், தேன், கரும்புச் சாறு, பால், தயிர், இளநீர், சங்காபிஷேகம், சந்தன களப அபிஷேகம், புஷ்பாஞ்சலி, அமுது படையல் நிகழ்ச்சிகள் நடந்தது.

சந்தைதோப்பு அங்காள பரமேஸ்வரி கோவிலில் சித்தி விநாயகர், அம்மன், புற்று மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அங்காள பரமேஸ்வரி அம்மன் வெள்ளிக் கவசத்தில் அருள்பாலித்தார். புதுக்குப்பம் முருகன் கோவிலுக்கு மணிமுக்தாற்றிலிருந்து பக்தர்கள் பால்குடம், மயில்காவடி, தாள் காவடி சுமந்து ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கம்மாபுரம் மகா மாரியம்மன் கோவிலில், காலை 7:00 மணியளவில் சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. அதேபோல், திரவுபதி அம்மன், சுப்ரமணியர், கைலாசநாதர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; புட்டபர்த்தியில் இன்றும் நாளையும் புத்த பூர்ணிமா கொண்டாடப்படுகிறது.ஆந்திர மாநிலம், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் புகழ்பெற்ற வைத்தியநாதசுவாமி கோவில் ... மேலும்
 
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் அண்ணாமலையாருக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி, சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar