ஏழுபேர் சிரஞ்சீவிகளாய்(என்றும் நிலைத் திருப்பவர்களாய்) இருக்க தகுதி பெற்றவர்களாய் இருக்கின்றனர். அவர்களில் ஒருவர் அனுமன். அனுமனுக்கு அவரது சுயநலமற்ற சேவை காரணமாகவும், விபீஷணன் உறவென்றும் பாராமல் நியாத்தின் பக்கம் நின்றதற்காகவும், மகாபலி இறைவனுக்கு தன் உயிரையே அர்ப்பணித்து தானதர்மம் செய்ததாலும், மார்க்கண்டேயர் இறைவன் மீது கொண்ட உண்மை பக்தி காரணமாக எமனையே வென்றதாலும், வியாசர் மகாபாரதம் என்னும் அழியா காவியத்தை எழுதி அதைப் படிப்போரின் பாவங்களைப் போக்கி அருள் செய்ததாலும், பரசுராமர் கொண்ட கடமையில் இருந்து விலகாமல் தந்தையின் கட்டளையை நிறைவேற்றிய தாலும், துரோணரின் மகன் அஸ்வத்தாமன் கடைசி வரை கட்சி மாறாமல் கவுரவர்களுக்காக தனது வீரத்தைக் காட்டியதாலும் சிரஞ்சீவி என்னும் நிலை பெற்று வாழ்கின்றனர்.