திருநெல்வேலி: நெல்லையில் பெருமாள் கோயில்களில் வெடிகுண்டு தடுப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். திருநெல்வேலியில் நேற்று மாலையில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவலில், நெல்லையில் பெருமாள்கோயில் ஒன்றில் வெடிகுண்டு இருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து நெல்லை மாநகரம் முழுவதும் உள்ள பெருமாள் கோயில்களில் வெடிகுண்டு தடுப்பு போலீசார், தடயவியல் நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக நெல்லையப்பர் கோயில் வளாகத்தில் உள்ள பெருமாள்சன்னதி, நெல்லை டவன் கரியமாணிக்கப்பெருமாள் கோயில், ஜங்ஷன் வரதராஜ பெருமாள்கோயில், திருவண்ணாதபுரம் பெருமாள்புரம் கோயில் ஆகியவற்றில் சோதனை நடத்தினர். இருப்பினும் வெடிப்பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.
4 வெடிகுண்டுகள் சிக்கின: முன்னதாக நெல்லை, நான்குவழிச்சாலையில் கீழநத்தம் என்னுமிடத்தில் ரோட்டோரத்தில் நான்கு நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் கண்டெடுத்தனர். பின்னர் அவற்றை செயல்இழக்கச்செய்தனர். நெல்லையில் யாராவது பழிக்குபழி வாங்கும் நடவடிக்கையில் வெடிகுண்டுகளை மறைத்து வைத்திருந்தார்களா என்ற கோணத்தில் விசாரித்தனர்.