சண்டிகேஸ்வரர் தான் சிவாலய வழிபாட்டு பலனை நமக்கு அருள்பவர். இவர் எப்போதுமே சிவதியானத்தில் இருப்பார். நாம் சிவனை தரிசித்து முடித்ததும், அதை தெரிவிப்பதற்காக இடது உள்ளங்கையில் வலது ஆள்காட்டி விரலால் மெல்ல மூன்று முறை தட்டி ஒலி எழுப்பி தரிசன பலனை தருமாறு வேண்டிக் கொள்ளலாம். கையை வேகமாக தட்டுவதோ, நூலைப் பிரித்து அவர் மீது போடுவதோ தவறான செயலாகும்.