சிவ வழிபாடு தான் சிறந்தது. நள மகாராஜாவுக்கு ஏற்பட்ட சனியின் பாதிப்பைப் போக்கியவர் திருநள்ளாற்றில் அருள்புரியும் தர்ப்பாரண்யேஸ்வரர் தான். வசதி உள்ளவர்கள் அவரவர் ஊரிலுள்ள சிவன் கோவிலில் ருத்ராபிஷேகம் செய்து வழிபட்டால் ஏழரைச்சனியின் தாக்கம் குறையும். சாதாரண அபிஷேகமும் செய்யலாம். நவக்கிரக சன்னிதியிலுள்ள சனீஸ்வரரை சனிக்கிழமையில் எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவதும் நன்மை தரும்.