Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ... மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) தொட்டது பொன்னாகும் மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ...
முதல் பக்கம் » வைகாசி ராசி பலன் (14.5.2024 முதல் 14.6.2024 வரை)
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) போட்டியில் வெற்றி!
எழுத்தின் அளவு:
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) போட்டியில் வெற்றி!

பதிவு செய்த நாள்

13 ஜன
2016
02:01

பெற்றோர் பாசம் கொண்ட மீன ராசி அன்பர்களே!

இந்த மாதம் ஜன. 20 வரை சுக்கிரன் நன்மை தருவார். சூரியன், புதன், ராகு, குரு ஆகியோரால் நன்மை உண்டாகும். சமுக மதிப்பு அதிகரிக்கும். அரசின் உதவி கிட்டும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய முயற்சி அனைத்திலும் வெற்றி காணலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களால் நன்மை கிடைக்கும். பொன், பொருள் சேரும். கணவன்- மனைவி இடையே அன்பு நீடிக்கும். விருந்து விழா என சென்று மகிழ்வீர்கள். சுபநிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்கேற்பீர்கள்.

தொழில், வியாபாரத்தில் சிறப்பான பலனைக் காணலாம். பணத்தை தேடி அலைந்த சூழ்நிலை மாறும். வீண் செலவு இனி ஏற்படாது. படிப்படியாக லாபம் அதிகரிக்கும். புதிய வியாபாரம் வளர்ச்சி தரும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். எதிரி தொல்லை மறையும்.

பணியாளர்களுக்கு சக ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். அரசு வகையில் நன்மையை எதிர்பார்க்கலாம். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கும். கோரிக்கைகள் எளிதில் நிறைவேறும். பணியிடத்தில் உங்களின் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் எளிதில் கிடைக்கும். ஜன. 20க்கு பிறகு சக கலைஞர்களின் எதிர்ப்புக்கு ஆளாகலாம்.

அரசியல்வாதிகள் சீரான நிலையில் இருப்பர். எதிர்பார்த்ததை விட வருமானம் குறையும்.

மாணவர்கள் முன்னேற்ற நிலையில் காணப்படுவர். போட்டிகளில் வெற்றி காண்பர்.

ஆசிரியரின் ஆலோசனை வளர்ச்சிக்கு துணை நிற்கும். புதன் சாதக நிலையில் இருப்பதால் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

விவசாயிகள் அதிக வருமானம் காண்பர். மாத பிற்பகுதியில் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகலாம்.

பெண்கள் சிறப்பான பலனைக் காணலாம். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி நடந்தேறும். வேலைக்கு செல்லும் பெண்கள் வளர்ச்சி பெறுவர். சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.

நல்ல நாள்: ஜன. 15,16,19,20,26,27,28,29,30, பிப்.5,6,7,8,11,12

கவன நாள்: ஜன. 31 பிப்.1 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 3,5,9 நிறம்: செந்துõரம், பச்சை

பரிகாரம்: சனியன்று சனீஸ்வரருக்கு எள்தீபமேற்றி வழிபடுங்கள். செவ்வாயன்று விநாயகர், முருகனை வணங்கி துவரை தானம் செய்யலாம்.

 
மேலும் வைகாசி ராசி பலன் (14.5.2024 முதல் 14.6.2024 வரை) »
temple news
மேஷம்; அசுவினி: ஞான மோட்சக்காரகனான கேது, ரத்தக்காரகனான செவ்வாயின் அம்சத்தில் பிறந்து, எதையும் ... மேலும்
 
temple news
ரிஷபம்; கார்த்திகை 2,3,4 ம் பாதம்சூரியன், சுக்கிரனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு செல்வமும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்; புதன், செவ்வாயின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு முயற்சி யாவும் வெற்றியாகும். ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4ம் பாதம்: குரு,சந்திரனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு புத்தி கூர்மையும், அறிவாற்றலும், ... மேலும்
 
temple news
மகம்: கேது, சூரியனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு தெய்வ அருளும் ஈடற்ற சக்தியும் இருக்கும். வைகாசி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar