பதிவு செய்த நாள்
10
பிப்
2016
03:02
நல்லுள்ளம் கொண்ட மேஷ ராசி அன்பர்களே!
சூரியனும், புதன், குரு, கேது மாதம் முழுவதும் நன்மை தருவர். சுக்கிரன் மார்ச் 8க்கு பிறகு நற்பலன் கொடுப்பார். பணவரவு சிறப்பாக இருக்கும். பெண்கள் மிகவும் அனுகூலமாக இருப்பர். மதிப்பு மரியாதை சிறப்பாக இருக்கும். வீட்டுக்கு தேவையான வசதி கிடைக்கும். கணவன்- மனைவி இடையே அன்பு பெருகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சகோதரிகள் உதவி செய்வர். பிப்.18,19ல் புத்தாடை, நகை வாங்கலாம்.
தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு வருமானம் அதிகரிக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட தொழில் மிக வளர்ச்சி அடையும். அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். பிப்ரவரி 22க்கு பிறகு லாபம் அதிகரிக்கும்.
பணியாளர்கள் அதிகாரிகளிடம் வைத்த கோரிக்கை நிறைவேறும். தொட்டதெல்லாம் பொன்னாகும் என்ற நிலைக்கு காலம் கனியும். மார்ச் 5,6,7ல் எதிர்பாராத நன்மை கிடைக்கும். அதிகாரிகளுடன் இருந்த கருத்து வேறுபாடு மறையும்.
கலைஞர்களுக்கு எதிரிகள் வகையில் இருந்து வந்த தொல்லைகள், அவப்பெயர், போட்டிகள் முதலியன மார்ச் 8க்கு பிறகு மறையும். புகழுடன் வாழலாம். பணவரவும் சிறப்பாக இருக்கும்.
அரசியல்வாதிகள் சுமாரான பலனை காண்பர். எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் சற்று பிற்போக்கான நிலை ஏற்படலாம்.
விவசாயிகளுக்கு காய்கறிகள்,பயறு வகை மூலம் நல்ல வருமானம் காணலாம். வழக்கு விவகாரங்கள் சாதகமாகும். மாணவர்களுக்கு ஆசிரியரிடம் மதிப்பு கூடும். நல்ல வளர்ச்சியும் போட்டிகளில் வெற்றியும் காணலாம்.
பெண்களுக்கு தடைபட்டு வந்த திருமணம் நடக்கும். கணவரின் அன்பு கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்படைவர்.பதவி உயர்வு கிடைக்கும்.
நல்ல நாள்: பிப். 14,15,18,19,25,26,27,28,29 மார்ச் 5,6,7,8,9,12,13
கவன நாள்: மார்ச்1,2 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 1,5,9 நிறம்: பச்சை, செந்தூரம்.
பரிகாரம்: நாக தேவதையை வணங்கி வாருங்கள். மேலும் முருகனை செவ்வாய்க் கிழமை வழிபடுங்கள். சுக்கிரனுக்கு வெள்ளிக்கிழமை அர்ச்சனை செய்யுங்கள்.