திருச்செங்கோடு கிரிவலப்பாதையில் மின்விளக்கு அமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜன 2016 12:01
திருச்செங்கோடு: திருச்செங்கோடு, அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில் கிரிவலப்பாதை ஆறு கி.மீ., தூரம் கொண்டது. மாதம் தோறும் பவுர்ணமி அன்று ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். கிரிவலப்பாதையில், போதுமான மின் விளக்கு வசதி செய்யப்படாமல் உள்ளது. இதனால், பாதையின் மையப்பகுதியான மலையடிக்குட்டையில் இருந்து வாலரைகேட் வரையில், இருட்டில் நடந்து செல்ல வேண்டிய நிலைக்கு பக்தர்கள் தள்ளப்பட்டுள்ளனர். சில சமயங்களில் கீழே விழுந்து காயமடைகின்றனர். இப்பாதையில், உயர் கோபுர மின்விளக்கு அமைக்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.