Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பேரின்ப வாழ்வளிக்கும் நர்மதா நதி! குதிரை மேல் பவனி வரும் பரமன்! குதிரை மேல் பவனி வரும் பரமன்!
முதல் பக்கம் » துளிகள்
லிங்கத் திருமேனியாக அருளும் நவகிரக நாயகர்கள்!
எழுத்தின் அளவு:
லிங்கத் திருமேனியாக அருளும் நவகிரக நாயகர்கள்!

பதிவு செய்த நாள்

23 ஜன
2016
03:01

நவகிரக கோயில் என்றதும் வேலூர் மாவட்டம், வேலூர் அருகே பொன்னை என்கிற கிராமத்தில் அமைந்துள்ள நவகிரக கோட்டை தான் பலருக்கும் நினைவுக்கு வரும். தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள நவகிரக கோயில்கள், திருநெல்வேலியில் அமைந்துள்ள நவகிரக கோயில்கள், சென்னையில் அமைந்துள்ள நவகிரக கோயில்கள் நிறைய உள்ளன. ஆனால், ஒரே இடத்தில் நவகிரகங்களுக்கான கோயில் காண்பது அஸ்ஸாமில். இது மட்டுமல்ல; கோயிலெங்கும் நவகிரகங்களுக்கு தனிச் சன்னிதிகள் இருப்பதும் அவற்றை வலம் வந்து வழிபடுவதும் நம் அனுபவம். அந்தச் சன்னிதியில் நவகிரக நாயகர்கள் தனித்தே, வாகனத்துடனோ அல்லது தம் தேவியர் சகிதமாகவோ இடங்கொண்டிருப்பார்கள். திருச்சி, அருகே உள்ள திருப்பைங்கிளி என்னும் திருப்பைஞ்ஞீலி யில் ஒன்பது குழிகளையே நவகிரகங்களாக வழிபடுவது வழக்கில் இருக்கிறது. சில இடங்களில் ஒரே வரிசையாக நேர்கோட்டில் நவகிரகங்கள் இருப்பதையும் காண்கிறோம்.

மாறாக, நவகிரக நாயகர்களை லிங்கத் திருமேனியாக உள்ளது, கவுஹாத்தியில். அஸ்ஸாம் மாநிலத் தலைநகரான கவுஹாத்தியின் தென்பகுதியில், சித்ரசால் மலைத் தொடரின் உச்சியில் அமைந்துள்ளது. இந்த நவகிரக கோயில். இந்தக் கோயிலில் நவகிரகங்களைக் குறிக்கும் வகையில் ஒன்பது சிவலிங்கங்கள் உள்ளன. மத்தியில் உள்ள சிவலிங்கத்தை சூரியனாகவும் மற்றும் எட்டு திசைகளில் மற்ற கிரகங்களையும் லிங்க வடிவத்திலேயே அமைத்துள்ளார்கள். இந்த ஒன்பது லிங்கங்களும் அந்தந்த கிரகங்களுக்கு உரிய வண்ணத் துணியால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. நட்சத்திர லிங்கங்கள் என்ற பெயரில் தமிழ் நாட்டில் விருத்தாசலத்தில் உள்ள பழமறைநாதர் திருக்கோயிலில் 27 லிங்கத் திருமேனிகளை ஒரே இடத்தில் தரிசிக்கலாம். இங்கேயோ, ஒன்பது கிரகங்களுக்கான லிங்கத் திருமேனிகளாக உள்ளன, அபூர்வமான தரிசனம் இது. இந்தக் கோயில் ராஜேஸ்வர்சிங் என்னும் அஹோம் மன்னரால் 18- ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். ஒரு முறை பூகம்பம் ஏற்பட்டபோது, இந்தக் கோயிலின் கோபுரம் சிதிலமடைந்துவிட்டது. கி.பி. 1923-1945 ம்ஆண்டுகளில் மீண்டும் இக்கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பெற்று கும்பாபிஷேகம் நடந்துள்ளது.

மலை உச்சியில் அமைந்துள்ள இக்கோயிலிலிருந்து பார்த்தால் பிரம்மபுத்ரா நதியில் சூரியன் அஸ்தமிக்கும் காட்சியும், சுற்றியுள்ள பசுமையான மலைத் தொடர்களும் இருக்கின்றன. இது வானவியல் ஆராய்ச்சிக்கு உகந்த இடமாகவும் அமைந்துள்ளது.

செல்லும் வழி: அஸ்ஸாமிலிருந்து தரை மார்க்கமாக செல்லலாம். அருகிலுள்ள விமான தளம் கவுஹாத்தி, அருகிலுள்ள ரயில் நிலையம் கவுஹாத்தி. அக்டோபரிலிருந்து ஏப்ரல் வரையில் உள்ள காலங்களில் பனியின் சீற்றம் குறைந்து காணப்படுவதால் அப்போது செல்லலாம்.

 
மேலும் துளிகள் »
temple news
மாசி மாத மூன்றாம் பிறை தரிசிப்பது முற்பிறவி பாவங்களை போக்கும். சந்திரனே மனதிற்கும் உடலுக்கும் ... மேலும்
 
temple news
உத்தர கன்னடா மாவட்டம் சர்சி தாலுகாவின் பிசலகொப்பா கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ சூரியநாராயணா ... மேலும்
 
temple news
ஷிவமொக்கா மாவட்டம் ஹொசநகர் தாலுகா குப்பிகா கிராமத்தில், குலிகுலி சங்கரர் கோவில் உள்ளது. சிவனுக்கு ... மேலும்
 
temple news
பொதுவாக ஷிவமொக்கா மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணியர், ஜோக் நீர் வீழ்ச்சி, பனவாசி உட்பட, பல்வேறு ... மேலும்
 
temple news
சிவாஜி நகர்: பெங்களூரு சிவாஜி நகர் ஷெப்பிங்ஸ் சாலையில் உள்ள ஓம் சக்தி கோவிலில், இன்று ஓம் வராஹி அம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar