பதிவு செய்த நாள்
27
ஜன
2016
11:01
தெலுங்கானா மாநிலத்தில், எண்ணெய் குடித்து நேர்த்திக்கடன் செலுத்தும் உற்சவம் விமரிசையாக நடந்தது. தெலுங்கானா மாநிலம், அதிலாபாத் மாவட்டத்தில், பழங்குடியின வம்சத்தை சேர்ந்த தோடர் இனத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள், தங்களின் குலதெய்வமான காந்தேவிற்கு, ஆண்டுதோறும் விமரிசையாக விழா நடத்துகின்றனர். இதில், இந்த வம்சத்து பெண்கள், 2 கிலோ நல்லெண்ணெய் குடித்து, தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதற்காக, தங்கள் ஊரில் உள்ளவர்களிடமிருந்து எள்ளை தானமாக பெற்று, வீட்டு முற்றத்தில் காயவைத்து எண்ணெய் ஆட்டுவர். விழாவின் போது அனைவர் முன்பாக அந்த எண்ணெயை குடித்து, வேண்டுதலை நிறைவேற்றுவர். இவ்வாறு செய்வதால், புத்திர பாக்கியம், குடும்ப பகை நீங்கி ஒற்றுமை மேலோங்கும் என, அவர்கள் நம்புகின்றனர். இதன்படி, நேற்று நடந்த விழாவில், ஏராளமான பெண்கள், நல்லெண்ணெய் குடித்து, தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.