கொடைக்கானல்: கொடைக்கானல் மேல்மலை கிராம மான பூம்பாறையில் அமைந்துள்ள குழந்தை வேலப்பர் கோயிலில் நேற்று காலை 11 மணியளவில் கொடியேற்றம் நடைபெற்றது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலாக பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில் <உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் தேரோட்ட விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இதையொட்டி நேற்று கோவிலில் கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவை யொட்டி பிப்., 3 ஆம் தேதி வரை குழந்தை வேலப்பர் சேவல், அன்னம் உள்பட பல்வேறு வாகனங்களில் சென்று, மண்டகப்படிகளில் தங்கி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். பிப்., 4 ந்தேதி காலை 11 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். மறுநாள் குதிரை வாகனத்தில் குழந்தை வேலப்பர் அருள்பாலிப்பார். தேரோட்ட விழாவை முன்னிட்டு பக்தர்கள் நாள்தோறும் பூம்பாறை சென்று குழந்தை வேலப்பரை தரிசித்து வருகின்றனர்.