சிவபெருமானுக்கு வில்வ மாலை மிகவும் உகந்தது. இதை அவர் அணிவதற்கு ஒரு காரணம் உண்டு. மனிதன் நிமிர்ந்து நிற்கக் காரணம் முதுகுத்தண்டு. வில்வமரம் அதிக வளைவுகள் இல்லாமல் நிமிர்ந்து வளரும் தன்மையுடையது. வில்வ அர்ச்சனை செய்து சிவனை வழிபட்டால் எதற்கும் அஞ்சாமல் துணிந்து வாழும் நிலை உண்டாகும். மகேந்திர பல்லவனால் துன்புறுத்தப்பட்ட திருநாவுக்கரசர்,“நாமார்க்கும் குடியல்லோம் நமனை யஞ்சோம்” என்று துணிவுடன் சொன்னார். அதாவது, “நான் யார்க்கும் அடிமையல்ல, எமனே வந்தாலும் அஞ்சமாட்டேன்,” என்பது இதன் பொருள். வில்வ அர்ச்சனை செய்தால், இப்படி துணிச்சல் மிக்க நிலை உண்டாகும். வில்வ இலைகள் முப்பிரிவாக இருக்கும். ஒரு காம்பில் மூன்று இலை இருக்கும். அது சிவனின் மூன்று கண்களைக் குறிக்கும்.