தை அமாவாசையில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் ராமர் தீர்த்தவாரி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜன 2016 11:01
ராமேஸ்வரம்: தை அமாவாசை(பிப்.,8) அன்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து ஸ்ரீ ராமர் அக்னி தீர்த்த கரையில் எழுந்தருளி தீர்த்தவாரி காண்கிறார். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தை அமாவாசை அன்று அதிகாலை 3.30 முதல் 4.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜையும், தொடர்ந்து கால பூஜையும் நடக்கிறது. காலை 7 மணிக்கு கோயிலில் இருந்து ஸ்ரீ ராமர், சீதை, லெட்சுணர் மற்றும் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி அக்னி தீர்த்த கரையில் எழுந்ருளியதும் தீர்த்தாவாரி நடக்கும். இதையடுத்து ஏராளமான பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராடி சுவாமியை தரிசிப்பார்கள். அன்று பகல் முழுவதும் திருக்கோயில் நடை திறந்திருக்கும். இரவு 8 மணிக்கு ஸ்ரீ ராமர், பஞ்சமூர்த்திகளுடன் வெள்ளி ரதத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடப்பதாக கோயில் இணை ஆணையர் செல்வராஜ் தெரிவித்தார்.