பதிவு செய்த நாள்
29
ஜன
2016
11:01
அவிநாசி : அவிநாசி அருகே, ஆட்டையாம்பாளையம் ஸ்ரீமாரியம்மன் கோவில், பூச்சாட்டு பொங்கல் விழா, நேற்று நடந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு அம்மை அழைத்தலும், நேற்று அதிகாலை மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல் நடைபெற்றது. பெண்கள், கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவையொட்டி, மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.இன்று மஞ்சள் நீராட்டு விழா, அன்னதானம் நடந்தது. மாலை, 4:00க்கு குழந்தைகள், பெரியவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டி நடத்தி, பரிசளிக்கப்படும்.