பதிவு செய்த நாள்
29
ஜன
2016
12:01
ப.வேலூர்: ப.வேலூர் சுல்தான்பேட்டையில் எழுந்தருளியுள்ள விநாயகர், முருகன், பகவதியம்மன் ஆகிய ஆலயங்களின் கும்பாபிஷேகம், இன்று (ஜன.29) நடக்கிறது. இதையொட்டி, வியாழக்கிழமை அதிகாலை, 5 மணிக்கு விநாயகர் வழிபாடு, புண்யாகம், கணபதிஹோமம், பூர்ணாகுதி மற்றும் தீபாரதனை நடந்தது. காலை, 9.30 மணிக்கு பக்தர்கள் காவிரியாற்றுக்குச் சென்று புனித நீராடி, தீர்த்தக்குடங்களுடன் கோவிலை வந்தடைடைந்தனர். இன்று அதிகாலை 4.30 மணிக்கு விநாயகர் வழிபாடு, யாகபூஜை, ஹோமம், ஸ்பர்சாகுதி, திரவியாகுதி மற்றும் இரண்டாம் கால யாகபூஜை நிறைவும், யாத்ர தானம், கடம் புறப்பாடும் நடக்கும். காலை 7 மணிக்கு விநாயகர், முருகன், பகவதியம்மன் ஆகிய ஆலயங்களின் விமான கோபுர கும்பாபிஷேகமும் மற்றும் மூலஸ்தான மகா கும்பாபிஷேகமும் நடக்கிறது.