பதிவு செய்த நாள்
29
ஜன
2016
12:01
ப.வேலூர்: ப.வேலூர், பேட்டை வினை தீர்த்த விநாயகர் கோவிலில் உள்ள, மீனாட்சி சுந்தரரேஸ்வரர் சுவாமிக்கு இன்று (ஜன.29) ராகு, கேது பெயர்ச்சி சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. நவக்கிரகங்களில் சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சிக்கு அடுத்தபடியாக ராகு, கேது பெயர்ச்சி முக்கிய இடத்தை பெற்றுள்ளது. ராகுகேது பெயர்ச்சியையொட்டி, மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்ப ராசியை சேர்ந்தவர்கள் இந்த சிறப்பு யாகத்தில் பங்கேற்கலாம். வாசன் பஞ்சாங்கப்படி இன்று (ஜன.29) இரவு, 11.28க்கு ராகு பகவான் கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும், கேது பகவான் மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கும் இடம் பெயர்கின்றார். முன்னதாக மாலை, 6 மணிக்கு பூஜை மற்றும் அபிஷேகம், தீபாராதனை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழா ஏற்பாட்டினை பக்தர்கள் மற்றும் பகுதிவாசிகள் செய்து வருகின்றனர்.