அஸ்வமேதயாகம், வாஜபேய யாகம் போன்றவை இப்போது நடக்கிறதா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02பிப் 2016 01:02
ஒரு அரசன் தன்னை சக்கரவர்த்தியாக அறிவித்துச் செய்வது அஸ்வமேதயாகம். அவரது பட்டத்துக்குதிரை எல்லா நாடுகளையும் தடையின்றி சுற்றி வர வேண்டும். அதாவது மற்ற நாட்டு அரசர்கள் அவரை சக்கரவர்த்தியாக ஏற்றுக்கொள்வதாக அர்த்தம். யாராவது எதிர்த்து அக்குதிரையை பிடித்து வைத்துக்கொண்டால் போரிட்டு ஜெயித்து குதிரையை மீட்ட பிறகு யாகத்தை தொடர வேண்டும். தோற்றுவிட்டால் இந்த யாகம் செய்ய தகுதி இழந்து விடுவார். இன்றைய ஜனநாயக ஆட்சியில் இது தேவையில்லாத ஒன்று. உலக நன்மை கருதி செய்யப்படுவது வாஜபேய யாகம். இதை அபூர்வமாக சிலர் செய்து வருகிறார்கள். பரம்பரையாக இதைச் செய்பவர்கள் தங்கள் பெயருடன் வாஜபேயீ என்று இணைத்துக்கொள்வதும் உண்டு. இதையே வாஜ்பாய் என்கிறார்கள்.